Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாநகர சபை அமர்வில் அன்னை பூபதிக்கு அஞ்சலி!

In இலங்கை
Updated: 08:05 GMT, Apr 16, 2018 | Published: 08:04 GMT, Apr 16, 2018 |
0 Comments
1066
This post was written by : Varshini

மட்டக்களப்பு மாநகரசபை அமர்வில், தியாக தீபம் அன்னை பூபதிக்கு மூன்று நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் தெரிவிற்குப் பின்னர், இன்று (திங்கட்கிழமை) அதன் முதலாவது அமர்வு இடம்பெற்றது.

மாநகர மேயர் தியாகராஜா சரவணபவான் தலைமையில் இடம்பெற்ற இந்த அமர்வில், அன்னை பூபதிக்கான அஞ்சலி குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் வி.தவராஜா வேண்டுகோள் விடுத்தார். அதன் பிரகாரம், சபையினரின் ஏகோபித்த சம்மதத்துடன் அன்னை பூபதிக்கு மூன்று நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டு, அதன் பின்னர் சபை அமர்வுகள் நடைபெற்றன.

ஈழப் போராட்டத்தில் இந்திய இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உயிர் நீத்த அன்னை பூபதியின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்பில் தற்போது நடைபெற்று வருகின்றன. இறுதிநாள் நிகழ்வுகள் எதிர்வரும் 19ஆம் திகதி மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)