Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழில் சிறப்பாக நடைபெற்ற தேசிய சித்திரைப் புத்தாண்டு விழா

In இலங்கை
Updated: 08:26 GMT, Apr 16, 2018 | Published: 08:26 GMT, Apr 16, 2018 |
0 Comments
1131
This post was written by : Varshini

தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில், தேசிய சித்திரைப் புத்தாண்டு விழா, யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில், யாழ். மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகம் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன. நிகழ்வில், தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

அத்தோடு, வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான க.சர்வேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்நிழ்வில் கலந்துகொண்டிருந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டன.

இப்புத்தாண்டு நிகழ்வில் அரச அதிகாரிகள், தனியார் நிறுவனங்களின் பிரமுகர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)