Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்த பிரதமர் எதிர்பார்ப்பு!

In
Updated: 08:46 GMT, Apr 16, 2018 | Published: 08:46 GMT, Apr 16, 2018 |
0 Comments
1038
This post was written by : Suganthini

வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் திட்டம் தொடர்பாக, பொதுநலவாய நாடுகளுக்கு, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே அழைப்பு விடுக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

லண்டனில் பொதுநலவாய மாநாடு இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகி, எதிர்வரும் 21ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, பொதுநலவாய நாடுகளுக்கு, பிரதமர் இந்த அழைப்பை விடுக்கவுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று கூறியுள்ளது.

வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், புதிய இணைப்புகளை உருவாக்குதல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுகையில், பிரித்தானியாவுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த 53 நாடுகளை இணைத்து உச்சி மாநாட்டைத் தொடங்கவும், பிரித்தானியப் பிரதமர் எதிர்பார்த்துள்ளதாகவும், அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும், பிரித்தானியாவுக்கு பொதுநலவாய நாடுகளின்; ஆதரவு கிடைக்குமென்று பிரதமர் எதிர்பார்ப்பதுடன், பிரெக்சிற்றுக்குப் பின்னர் பிரித்தானியாவின் எதிர்காலம் சிறப்பாக இருக்குமெனவும், பிரதமர் நம்புகின்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)