Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பிரித்தானியாவில் போராட்டம்

In இந்தியா
Updated: 11:43 GMT, Apr 16, 2018 | Published: 11:43 GMT, Apr 16, 2018 |
0 Comments
1153
This post was written by : Kemasiya

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு வலியுறுத்தி பிரித்தானியத் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரித்தானியாவில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்துக்கு எதிரில் இன்று (திங்கட்கிழமை) இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்கள், தமிழகத்தில் நீட் பரீட்சையை இரத்து செய்ய வேண்டும் என்றும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் கோசமெழுப்பியிருந்தனர்.

மேலும், ஸ்டார்லைட் ஆலையை மூட வேண்டும் என்று வலியுறுத்திய பிரித்தானிய வாழ் தமிழர்கள், தமிழகத்தில் தமிழர்களின் உரிமை பல வழிகளிலும் பறிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறும், தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டார்லைட் ஆலையை மூடுமாறும் வலியுறுத்தி ஒட்டுமொத்த தமிழகமே கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.

அரசியல் கட்சிகள், சமூக அமைப்புக்கள் மற்றும் மாணவர் அமைப்புக்கள் என போதங்கள் பாராது இவ்வாறு போராட்டங்கள் மேற்கொள்ளப்படுவதினால், தற்போது இவ்விவகாரம் தமிழகத்தை கடந்து உலக வாழ் தமிழர்கள் அனைவரின் கவணத்தையும் திசைத் திருப்பியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg