வேலைத் தளங்களில் பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் அதிகரிப்பு: ஆய்வில் தகவல்
This post was written by : Anojkiyan

கனடாவில் வேலைத் தளங்களில் பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் அதிகரித்துவருவதாக, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
கனடாவின் மனித வள நிறுவனம் ஒன்று அண்மையில் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தாம் வேலைசெய்யும் இடங்களில் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளதாக 17 சதவீதம் பேர் தெரிவித்துள்ள நிலையில், இவ்வாறான பாலியல் முறைகேட்டு முறைப்பாடுகள் 19 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பங்குகொண்ட 2,000 பேரில், மூன்றில் ஒரு பங்கு பெண்களும், 12 சதவீத ஆண்களும் தாம் பணியிடங்களில் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளனர்