Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இராணுவத்தினர் மூடிய வீதியால் மக்களுக்கு அசௌகரியம்: மீள் குடியேற்ற தலைவர் ச.சஜீவன்

In இலங்கை
Updated: 09:59 GMT, Apr 16, 2018 | Published: 09:58 GMT, Apr 16, 2018 |
0 Comments
1086
This post was written by : poovannan

வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் வீதிகளை இராணுவத்தினர் மூடியுள்ளமையால் குறித்த பகுதிகளுக்கு மக்கள் செல்ல முடியாத நிலை காணப்படுவதாக வலி. வடக்கு மீள் குடியேற்ற குழு தலைவர் ச.சஜீவன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “வலி. வடக்கில் கடந்த 27 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த 680 ஏக்கர் நிலப்பரப்பு கடந்த வாரம் மீள உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் ஆவளை சந்தியிலிருந்து மயிலிட்டி கிராமக்கோட்டடிசந்தி வரையிலான வீதி இன்னமும் இராணுவ கட்டுப்பாடிற்குள் உள்ளது.

இவ்வீதிக்கு குறுக்காக இராணுவத்தினர் உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைப்பது போன்ற முள் வேலிகளை அமைத்து பொதுமக்கள் பாவிக்க முடியாத வகையில் மூடியுள்ளனர். அதனால் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் மக்கள் அங்கு செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)