Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

செட்டிகுளம் பிரதேச சபை சுதந்திரக் கட்சியின் வசம்

In இலங்கை
Updated: 15:42 GMT, Apr 16, 2018 | Published: 11:02 GMT, Apr 16, 2018 |
0 Comments
1114
This post was written by : poovannan

செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளராக ஆசிர்வாதம் அந்தோனியும் உப தவிசாளராக ந.சிவாயினியும் தெரிவு செய்யப்பட்டனர்.

தவிசாளர் பதவிக்காக சுதந்திர கட்சியை சேர்ந்த ஆசிர்வாதம் அந்தோனியும் தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த சு.யெகதீஸ்வரனும் போட்டியிட்டனர்.

இந்நிலையில் பகிரங்கமாக எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் சுதந்திர கட்சியின் சார்பில் 4 பேரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 2 பேரும் பொதுஜன பெரமுனவின் சார்பில் ஒருவரும் ஆசிர்வாதம் அந்தோனிக்கு வாக்களித்தனர்.

கூட்டமைப்பின் சார்பில் போட்டி இட்ட யெகதீஸ்வரனுக்கு கூட்டமைப்பின் சார்பில் 5 வாக்குகளும் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் 1 வாக்கு என 6 வாக்குகள் கிடைக்கப்பெற்றன. இதனால் ஆசிர்வாதம் அந்தோனி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இதே வேளை உப தவிசாளர் பதவிக்காக ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த நவரட்ணம் சிவாயினியும் கூட்டமைப்பைச் சேர்ந்த சி.அருள்கரனும் போட்டியிட்டனர். இதன்போது சிவாயினிக்கு 7 வாக்குகளும் அருள்கரனுக்கு 6 வாக்குகளும் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில் ந.சிவாயினி உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட இருவர் இச்சபை அமர்வில் கலந்துகொள்ளாமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg