Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோச்சடையான் பட விவகாரம் தொடர்பான லதா ரஜினியின் மனு தள்ளுபடி

In சினிமா
Updated: 10:49 GMT, Apr 16, 2018 | Published: 10:47 GMT, Apr 16, 2018 |
0 Comments
1031
This post was written by : Varatharajan Yuganthini

கோச்சடையான் பட விவகாரத்தில் நிலுவைத் தொகையை செலுத்துவது தொடர்பாக லதா ரஜினிகாந்தின் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) தள்ளுபடி செய்துள்ளது.

கோச்சடையான் படத்தை இயற்றுவதற்காக  ஆட்பீரோ நிறுவனத்திடம், லதா ரஜினிகாந்த் 10 கோடி ரூபாவை கடனாக பெற்றிருந்தார். குறித்த கடனை உடனடியாக செலுத்த வேண்டுமென அந்நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இதன்போது 18 வாரங்களுக்குள் லதா ரஜினிகாந்த வழக்கின் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் அவர் 9.20 கோடி ரூபாவை செலுத்தியுள்ளார்.

ஆகையால் மீதமுள்ள தொகையை செலுத்துவது தொடர்பில் லதா ரஜினிகாந்த் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவை  உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்ததுடன் மீதமுள்ள நிலுவைத் தொகையை ஜுலை 3 ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)