Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வர்த்தகப்போர் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் -ஜப்பான்

In உலகம்
Updated: 11:07 GMT, Apr 16, 2018 | Published: 11:07 GMT, Apr 16, 2018 |
0 Comments
1217
This post was written by : Suganthini

வர்த்தகப்போர் ஆரம்பமாகினால், உலகளாவிய பொருளாதார முன்னேற்றத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்துமென, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ரரோ கோனோ தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள சீன அரசாங்கத்தின் உயர்மட்ட ராஜதந்திரி வாங் ஜி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ரரோ கோனோ உள்ளிட்டோரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து டோக்கியோவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது,’சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில், வர்த்தகப்போர் ஆரம்பமாகினால், உலகளாவிய பொருளாதார முன்னேற்றத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்துமென்பதுடன், இந்த நிலைப்பாட்டை ஜப்பானும் சீனாவும் புரிந்துகொண்டுள்ளன’ என்றார்.

சீனாவும், அமெரிக்காவும் சுங்கவரித்திட்டத்தை மாறி, மாறி முன்வைத்ததைத் தொடர்ந்து, அவ்விரு நாடுகளுக்கிடையிலும் முறுகல் நிலை காணப்படுவதுடன், வர்த்தகப்போர் ஆரம்பமாகும் சாத்தியம் காணப்படுவதாகவும், உலகளாவிய ரீதியில் கவலைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையிலேயே, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)