அம்பாறையில் நலன்புரி சங்கத்தினரின் பாராட்டு விழா

அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை மண்ணில் இருந்து வெளிப்பட்ட சாதனை விருட்சங்களை பாராட்டி கௌரவிற்பதற்காக வீரமுனை நண்பர்கள் நலன்புரி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் பாராட்டு விழா வீரமுனை பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.
வீரமுனை நண்பர்கள் நலன்புரி அமைப்பின் தலைவர் எஸ்.திருச்செல்வம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் எஸ்.வினுக்சன் (2017ம் ஆண்டு இடம்பெற்ற சாதாரண தர பரீட்சையில் 9ஏ), சு.கோபிநாத் (ஆயர்வேத மருத்துவ பீடம்), ஏன்.சுகிர்தன் (மருத்துவ பீட மாணவன் – யாழ்ப்பாணம்), வி.தட்சாயினி (மருத்துவ பீடத்திற்கு தெரிவான மாணவி).
மேலும், த.அர்ச்சனா (மருத்துவ பீடத்திற்கு தெரிவான மாணவி) எஸ்.றோபியானந் (பொறியியல் பீட மாணவன் – யாழ்ப்பாணம்) , த.செந்தில்நாதன் (களுவாஞ்சிகுடி பிரதேச அபிவிருத்தி வங்கியின் கிளை முகாமையாளராக தெரிவானமை), பி.பரமதயாளன் (வீரமுனை கிராமத்தின் முதலாவது கல்வி நிர்வாக சேவையாளர்) ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் அதிதிகளாக கே.விமலநாதன் (மேலதிக அரசாங்க அதிபர்-அம்பாரை மாவட்டம்), டாக்டர் அ.லதாகரன் (மாகாண உதவி சுகாதார பணிப்பாளர்), கலாநிதி.செல்வராஜா கணேஸ் (பொறியியலாளர்), என்.கோவிந்தசாமி (பிரதேச சபை உறுப்பினர் சம்மாந்துறை), மு.பொன்னம்பலம் (ஓய்வு பெற்ற கிராம சேவகர்).
மற்றும் எஸ்.கோணேசமூர்த்தி (அதிபர்), கே.நிமலேஸ்வர குருக்கள் (சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலய பிரதம குரு), கே.ரவி (சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலய செயலாளர்), யு.சதானந்தா (கண்ணகி அம்மன் ஆலய செயலாளர்), இரா.அரசரெட்ணம் (கண்ணகி அம்மன் ஆலய தலைமை பூசகர்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்



