Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விளையாட்டுத்துறை மூலம் மன வலிமையினை பெற்றுக்கொள்ள முடியும்: துரைசிங்கம் மதன்

In இலங்கை
Updated: 13:27 GMT, Apr 16, 2018 | Published: 13:27 GMT, Apr 16, 2018 |
0 Comments
1057
This post was written by : poovannan

விளையாட்டுத்துறை மூலம் இளைஞர் – யுவதிகள் மன வலிமையினையும் வேலைவாய்ப்பினையும் பெற்றுக்கொள்ள முடியும் என மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – இருதயபுரம் கிழக்கில் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு இடம்பெற்ற விளையாட்டு விழாவின்போது பிரதம அதிதியாக கலந்துகொண்டு இன்று (திங்கட்கிழமை) உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், “எதிர்காலத்தில் விளையாட்டுத்துறை மூலம் தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்களும் மன வலிமையும் பிள்ளைகளுக்கு கிடைக்கின்றது. விளையாட்டின் முக்கியத்தும் உணரப்படாத நிலையிலேயே பலர் இருக்கின்றனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் பிள்ளைகளை விளையாட்டுக்கு செல்லவிடாமல் பெற்றோர் தடை விதிக்கும் நிலையும் இருக்கின்றது. வெற்றி தோல்விகளை ஜீரணித்துக்கொள்ளாத நிலமையே தற்கொலைகளுக்கு காரணமாக அமைகின்றன.

இவ்வாறான நிலையில் தமது பிள்ளைகளை விளையாட்டுத்துறைகளில் ஈடுபடுத்துவதன் மூலம் மன வலிமையினையும் உடல் வலிமையினையும் பெற்றுக்கொள்ளமுடியும்.

அண்மையில் 3800 இளைஞர் யுவதிகள் கா.பொ.த.சாதாரண தர சித்தியுடன் விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர்களாக தெரிவு செய்யப்படவுள்ளனர். ஆகவே விளையாட்டுத்துறைக்கு செல்வதால் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ள முடியாது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது” எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் அதில் கலந்துகொண்டவர்களுக்கு பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன. இந்த விளையாட்டு நிகழ்வுகளில் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கிழக்கு யுத் அக்ஸசன் இளைஞர் கழகத்தின் தலைவர் செல்வி ஜி.ருக்சிகா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கிராமசேவையாளர் சுகந்தினி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)