Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லண்டன் நகரில் தலைக்கு எண்ணெய் வைக்கும் சடங்கில் மைத்திரிபால சிறிசேன

In இலங்கை
Updated: 13:40 GMT, Apr 16, 2018 | Published: 13:40 GMT, Apr 16, 2018 |
0 Comments
1166
This post was written by : poovannan

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (திங்கட்கிழமை) லண்டன் நகரில் உள்ள பௌத்த விகாரையில் இடம்பெற்ற தலைக்கு எண்ணெய் தேய்க்கும் புத்தாண்டு சடங்கில் கலந்துகொண்டார்.

லண்டனின் பிரதான சங்கநாயக்கரும் பௌத்த விகாரையின் விகாராதிபதியுமான வண. போகொட சீலவிமல நாயக்க தேரர் இதன்போது ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு சம்பிரதாய முறைப்படி தலைக்கு எண்ணெய் தேய்த்து ஆசீர்வாதம் வழங்கினார். அதன் பின்னர் விகாரையில் இடம்பெற்ற சமய அனுஷ்டானங்களிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

லண்டனில் வசிக்கும் இலங்கையர்களும் விகாரைக்கு வருகை தந்திருந்ததுடன், அவர்களோடு சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)