Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா நகரசபையை கூட்டமைப்பு இழந்ததையடுத்து பதற்ற நிலை!

In இலங்கை
Updated: 15:16 GMT, Apr 16, 2018 | Published: 15:06 GMT, Apr 16, 2018 |
0 Comments
1442
This post was written by : poovannan

வவுனியா நகரசபைக்கு பெரும்பான்மை பெற்றிருந்த தமிழரசுக் கட்சி தோல்வியடைந்ததுடன், தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றிபெற்றதையடுத்து இன்று (திங்கட்கிழமை) நகரசபை வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது.

அங்கு வந்திருந்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வட. மாகாண சபை உறுப்பினர்களான சத்தியலிங்கம், சிவாஜிலிங்கம் ஆகியோருக்கிடையில் முரண்பட்டுக்கொண்டனர்.

குறித்த நகர சபையை இழந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், வட. மாகாண சபை உறுப்பினரான சிவாஜிலிங்கத்துடன் முரண்பட்டுக்கொண்டிருந்த வேளையில் சுமந்திரன் மற்றும் அடைக்கலநாதன் ஆகியோர் உடனடியாக அவ்விடத்திலிருந்து சென்றுவிட்டனர்.

இதேவேளை, தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆதரவளித்த ஈ.பி.டி.பி. உறுப்பினர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா தெற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரும், “யாழ்ப்பாணத்தில் தேசிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்துவிட்டு, வவுனியாவில் ஏன் எம்மை கைவிட்டீர்கள்” எனக் கூறி முரண்பட்டார்.

மேலும், ஐ.தே. கட்சியின் பெண் உறுப்பினரை வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் தரப்பினர் கடத்திச்சென்று கூட்டமைப்புக்கு எதிராக வாக்களிக்க வைத்ததாக அக்கட்சியின் வவுனியா அமைப்பாளர் கருணாதாச குற்றம் சுமத்தினார்.

ஆனால் அங்கு வந்த அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரரும் முன்னாள் வட. மாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அதனை மறுத்திருந்தார். அத்துடன் குறிப்பிட்ட பெண் வேட்பாளரும் அந்த குற்றச்சாட்டை மறுத்து தனது விருப்பப்படியே சபையின் தவிசாளர் தெரிவில் செயற்பட்டதாக தெரிவித்தார்.

இதன்பின் அமைச்சர் றிசாட் பதியுதீனின் சகோதரருக்கும் ஐ.தே.க. கட்சியின் அமைப்பாளருக்குமிடையில் கைகலப்பு ஏற்படும் நிலையேற்பட அங்கிருந்தவர்கள் நிலைமையை சமரசம் செய்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)