Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லண்டன் வாழ் இலங்கையர்களை சந்திக்கின்றார் ஜனாதிபதி மைத்திரி

In இலங்கை
Updated: 02:58 GMT, Apr 17, 2018 | Published: 02:56 GMT, Apr 17, 2018 |
0 Comments
1094
This post was written by : Varshini

பிரித்தானியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, லண்டன் வாழ் இலங்கையர்களை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்திக்கவுள்ளார்.

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரி நேற்று முன்தினம் பிரித்தானியாவுக்கு பயணமானார். நேற்று லண்டனில் இடம்பெற்ற தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

அந்தவகையில், இன்றைய தினம் லண்டன் வாழ் இலங்கையர்களை ஜனாதிபதி சந்திப்பதோடு, அவர்களுடன் நட்பு ரீதியில் கலந்துரையாடவுள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி, மாநாட்டில் கலந்துகொள்ளும் அரச தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்பில் ஈடுபடவுள்ளார். குறிப்பாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg