Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரிய இரசாயன தாக்குதல்: டவுமாவிற்கு செல்ல ஆய்வாளர்களுக்கு அனுமதி

In உலகம்
Updated: 03:30 GMT, Apr 17, 2018 | Published: 03:30 GMT, Apr 17, 2018 |
0 Comments
1117
This post was written by : Risha

சிரியாவில் இரசாயன தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகுதிகளுக்கு சென்று ஆய்வுசெய்வதற்கு சிரியாவிலுள்ள இரசாயன ஆயுத ஆராய்ச்சியாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இரசாயன ஆயுதங்களை தடை செய்யும் அமைப்பின் உண்மையை கண்டறியும் பணியாளர்கள் குழுவினர் நாளை (புதன்கிழமை) குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

சர்வதேச இரசாயன ஆயுத ஆய்வாளர்கள் குழு கடந்த சனிக்கிழமை முதல் சிரியாவில் தங்கியுள்ள போதிலும், அவர்கள் இரசாயன தாக்குதல் இடம்பெற்ற டவுமா பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், குறித்த பகுதிக்கு நாளை விஜயம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

எனினும், தாக்குதல் இடம்பெற்ற டவுமா பகுதிக்கு ரஷ்யா ஏற்கனவே சென்றுள்ள நிலையில், விசாரணைகளை தாமதப்படுத்தும் வகையில் ஆதாரங்களை ரஷ்யா சிதை;திருக்கலாம் என இரசாயன ஆயுதங்களை தடை செய்யும் அமைப்பின் அமெரிக்க தூதுவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், டவுமாவில் ஆதாரங்களை சிதைக்கும் வகையிலான எவ்வித நடவடிக்கையையும் ரஷ்யா முன்னெடுக்கவில்லை என்பதற்கு உத்தரவாதம் அளிப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

டவுமாவில் கடந்த 7ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட இரசாயன தாக்குதலானது, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் சிரியா மீதான இராணுவ நடவடிக்கையை தூண்டிவிட்டது.

ஆனால் சிரியாவில் இரசாயன தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சிரியாவும், அதன் நட்பு நாடான ரஷ்யாவும் தொடர்ந்து மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)