Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தான் எல்லையில் வாழும் மக்கள் இந்தியா எல்லைக்குள் சென்றனர்

In இந்தியா
Updated: 06:59 GMT, Apr 17, 2018 | Published: 04:31 GMT, Apr 17, 2018 |
0 Comments
1180
This post was written by : Kemasiya

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் வாழும் உறவினர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்ந்துள்ளனர்.

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான காஷ்மீர் எல்லை ஊடாக, நட்பு ரீதியிலான பேருந்து சேவை நேற்று (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர்.

நேற்று ஆரம்பிக்கப்பட்ட குறித்த நட்பு ரீதியிலான பேரூந்து சேவையூடாக, பாகிஸ்தானின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியிலிருந்து பொதுமக்கள் இந்திய எல்லைக்குச் சென்றுள்ளனர்.

காஷ்மீரின் இருபுறங்களிலும் உறவினர்களை கொண்டுள்ள இந்திய மற்றும் பாகிஸ்தான் குடிமக்கள் ஒருவரை ஒருவர் பார்வையிடும் வகையில், கடந்த 2006 ஆம் ஆண்டு பூஞ்ச்-ராவலாகோட் பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி நேற்று தமது உறவினர்களை பார்வையிட்ட மக்கள், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தமது துயரங்களை பகிர்ந்து கொண்டதுடன், கிராமங்களை சுற்றிப் பார்த்து முன்னோர்களின் நினைவுகளில் மகிழ்ச்சியடைந்தனர்.

அத்துடன், இந்தியர்களின் விசாக்களுக்கு இஸ்லாமாபாத் விரைவான அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)