Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சொகுசு பேருந்து தீ வைத்து எரிப்பு: வாழைச்சேனையில் சம்பவம்

In இலங்கை
Updated: 05:22 GMT, Apr 17, 2018 | Published: 04:26 GMT, Apr 17, 2018 |
0 Comments
1216
This post was written by : poovannan

கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் புணானை காட்டுப் பகுதியில் சொகுசு பேருந்துக்கு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் புணானை பொலிஸ் சாவடியிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திலுள்ள காட்டுப்பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முன் கூட்டிய ஆசனப்பதிவு செய்யப்பட்ட பயணிகளை ஏற்றி வருவதற்காக பொலன்னறுவையிலிருந்து கல்முனை நோக்கி NC-NA 8105 இலக்க பேருந்து சென்றுகொண்டிருந்த வேளையில், இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பேருந்தைப் பின் தொடர்ந்து வந்த நால்வர் அதனைத் தீயிட்டுக் கொளுத்தியிருக்கலாம் என வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேருந்துலிருந்து சாரதியும் அதன் உரிமையாளருமான மன்னம்பிட்டியைச் சேர்ந்த எச்.ஏ.சோமசிறி சாமர புஸ்பகுமார (வயது 30) மற்றும் அவரது உதவியாளரும் நடத்துநருமான வாழைச்சேனையைச் சேர்ந்த எம்.முஹம்மத் (வயது – 25) ஆகியோர் சிறிய காயங்களுடன் தப்பித்துக்கொண்ட நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)