Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரியா மீதான தாக்குதலை எதிர்த்து பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்

In
Updated: 05:05 GMT, Apr 17, 2018 | Published: 05:05 GMT, Apr 17, 2018 |
0 Comments
1238
This post was written by : Risha

சிரியா மீது விமான தாக்குதல்களை முன்னெடுக்கும் பிரித்தானியாவின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்கணக்கான போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விமான தாக்குதல் குறித்து நாடாளுமன்றம் அவசரமாகக் கூட்டப்பட்டு விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று (திங்கட்கிழமை) இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறைந்தபட்சம் நாடாளுமன்றத்தில் விவாதிக்காது பிரித்தானியாவால் எவ்வித தாக்குதல்களையும் முன்னெடுக்க முடியாது என போர் நிறுத்த கூட்டணி உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ”சிரியா மீதான இத்தகைய தாக்குதல்களானது, இரசாயன தாக்குதலினாலோ அல்லது குண்டு தாக்குதல்களின் காரணமாகவோ இடம்பெயர்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாகாது. இதுவே நாட்டின் பெரும்பான்மையானோர் புரிந்துக் கொண்ட உண்மையாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

இதேவேளை, ஒரு நாடு தாக்கப்படாத வரை அவர்கள் மற்றொரு சர்வதேச நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்கான உரிமை இல்லை என ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற அங்கீகாரத்தை பெறாமல் சிரியாவுக்கு எதிரான விமான தாக்குதல்களை நடத்துவதற்கான முடிவை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஆதரித்துள்ளார்.

கிழக்கு கௌட்டாவின் டூமா நகரில் கடந்த 7ஆம் திகதி சிரிய அரசாங்கப் படையினர் நடத்தியதாக கூறப்படும் இரசாயனத் தாக்குதலுக்கு பதிலடியாக, சிரியாவில் அமெரிக்காவின் தலைமையில் தாக்குதல் நடத்த பிரித்தானியாவும் பிரான்ஸும் ஆதரவளித்துள்ளன.

இந்நிலையில், சிரிய அரசாங்கத்துக்கு எதிரான தாக்குதலை நடத்துவதற்கு நாடாளுமன்ற அங்கீகாரத்தை பெறாமல் பிரதமர் மே ஒப்புதல் அளித்துள்ளமை பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg