Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

44 நாட்கள் போராட்டம் நிறைவு: கல்விசாரா ஊழியர்கள் கடமையில்!

In இலங்கை
Updated: 04:55 GMT, Apr 17, 2018 | Published: 04:54 GMT, Apr 17, 2018 |
0 Comments
1065
This post was written by : Varshini

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) அவர்கள் கடமைக்கு திரும்பியுள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 44 நாட்களாக இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், 10 வீத சம்பள அதிகரிப்பு தொடர்பான சுற்றுநிருபத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கடந்த 12ஆம் திகதி வெளியிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் கடமைக்கு சமூகமளிக்கவுள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதேவேளை 17ஆம் திகதிக்கு முன்னர் கடமைக்கு திரும்பாதவர்கள், வேலையிலிருந்து தானாக விலகியதாக கருதப்படுவர் என கடந்த 11ஆம் திகதி உயர்கல்வி அமைச்சும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக, நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)