Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரசாயன நச்சுத்தன்மைக்கான அறிகுறிகள் இல்லை: மருத்துவர்கள்

In உலகம்
Updated: 05:16 GMT, Apr 17, 2018 | Published: 05:16 GMT, Apr 17, 2018 |
0 Comments
1101
This post was written by : Risha

சிரியாவின் டூமா நகர மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இரசாயன நச்சுத்தன்மையின் அறிகுறிகள் கண்டறியப்படவில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

டூமா நகரில் இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச நாடுகள் சந்தேகம் வெளியிட்டுவரும் நிலையில் இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

டூமா நகரில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக அண்மையில் வெளியாகிய காணொளி ஒன்றில், கடுமையாக சேதமடைந்த கட்டடத்தின் அடித்தளத்தில் குழந்தைகள் வாயில் நுரையுடன் காணப்பட்டமை பதிவாகியிருந்தது.

இவ்வாறு சந்தேகத்திற்கிடமான இரசாயன தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் கட்டடத்திலிருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டமையும் காணொளியில் பதிவாகியிருந்தது.

அழுக்கு குவியல்களால் சூழப்பட்ட ஒரு கட்டடத்தின் அடித்தளத்தில் இந்த மருத்துவமனை அமைந்துள்ளது. இது டூமாவின் முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றாகும்.

இந்த மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் மர்வான் ஜபர் இது தொடர்பாக தெரிவிக்கையில், ‘சுவாச பிரச்சினைகள் காரணமாக கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு நாம் சிகிச்சை அளித்துள்ளோம்.

பின்னர் சில காயமடைந்தவர்களும் வேறு சிலரும் சிகிச்சை பெற்ற போது, இரசாயண தாக்குதல் தொடர்பான செய்தி பரப்பப்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர். எனினும் அவர்களை நாம் சோதனையிட்ட போது இரசாயண நச்சுத்தன்மைக்கான எவ்வித அறிகுறியும் இல்லை.

நாம் எல்லோரையும் சமாதானப்படுத்தி அனைத்தையும் விளக்கி கூறினோம். இருப்பினும் அந்த செய்தி வைரலாக பரவிவிட்டது’ என்று தெரிவித்துள்ளார்.

சிரியாவில் இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச நாடுகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற நிலையில், இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பின் பரிசோதனைக் குழு ஒன்று விசாரணைகளுக்காக டமாஸ்கஸ் சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)