Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

In இலங்கை
Updated: 05:35 GMT, Apr 17, 2018 | Published: 05:35 GMT, Apr 17, 2018 |
0 Comments
1141
This post was written by : Varshini

யாழ். சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற இவ்விபத்தில், மல்லாகத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான தர்மலிங்கம் ராமேஸ்வரன் (வயது – 41) என்பவரே உயிரிழந்தவராவார்.

இரவு உணவு வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் இவர்கள் சென்றபோது, எதிரே வந்த பட்டா ரக வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த இருவரும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ராமேஸ்வரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார், பட்டா ரக வாகன சாரதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)