Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உல்லாச பயணிகளுக்காக மாறுகிறது பொகவந்தலாவ! – பிரதமர் ரணில் மேற்பார்வை

In இலங்கை
Updated: 05:58 GMT, Apr 17, 2018 | Published: 05:58 GMT, Apr 17, 2018 |
0 Comments
1156
This post was written by : Varshini

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ பிரதேசத்தை உல்லாச பயணிகள் பிரதேசமாக மாற்றியமைப்பதற்கான நடவடிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்பார்வை செய்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அங்கு விஜயம் செய்த பிரதமர் ரணில், பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில் ‘குழிப்பந்தாட்டம்’ கோல்ப் மைதானம் ஒன்றையும், உல்லாச விடுதிகளையும் அமைப்பதற்கான இடங்களை பார்வையிட்டார்.

அதன் பின்னர் பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றுக்கும் விஜயம் செய்தார்.

பிரதமரின் இவ்விஜயத்தில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ, ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பிரதித் தலைவர் ஏ.எம்.பாயிஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் காலத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக ஹட்டனுக்குச் சென்றிருந்த பிரதமர், நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளை மாற்றியமைப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)