Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

செங்கலடி சுகாதார பிரிவில் இனங்காணப்பட்ட 200 டெங்கு நோயாளிகள்

In இலங்கை
Updated: 06:10 GMT, Apr 17, 2018 | Published: 06:10 GMT, Apr 17, 2018 |
0 Comments
1046
This post was written by : poovannan

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேசத்தில் இந்த ஆண்டில் 200 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார வைத்திய அதிகாரி இ.சிறிநாத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – செங்கலடி பொதுச் சுகாதார பிரிவின் ஏற்பாட்டில் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு தெளிவூட்டும் கருத்தரங்கு நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றபோது அங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “மாவட்டத்தில் இரண்டாது சனத்தொகையினை உள்ளடக்கிய செங்கலடி பிரதேசத்தில் இதுவரை 200 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். எனவே இங்கு சுகாதாரத்துறையை வலுப்படுத்த வேண்டிய தேவை அதிகம் உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குவின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இம்மாவட்டத்தில் 3 இறப்புகள் பதிவாகியுள்ளன. டெங்கு நோய் காரணமாக நாட்டில் 8 பேர் மரணமடைந்துள்ளனர்.

கடந்த காலங்களில் கொள்கலன்களில் நீர் தொங்கி நிற்பது பெரும் பிரச்சினையாக காணப்பட்டது அவற்றை பெருமளவில் அகற்றியுள்ளோம். தற்போது டெங்கு பரவக்கூடிய இடங்களாக நீர் தாங்கிகள் கிணறுகள் என்பன அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

பிரதேசத்திலுள்ள அடையாளப்படுத்தப்படாத காணிகள் தொடர்பாக பிரதேச சபை ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சில பகுதிகளில் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் உதவியுடன் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)