Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு ஆளுநர் கடமைகளை மீண்டும் பொறுப்பேற்றார் குரே!

In இலங்கை
Updated: 06:21 GMT, Apr 17, 2018 | Published: 06:21 GMT, Apr 17, 2018 |
0 Comments
1243
This post was written by : Varshini

வடக்கு மாகாண ஆளுநராக மீளவும் நியமிக்கப்பட்டுள்ள ரெஜினோல்ட் கூரே, இன்று (செவ்வாய்க்கிழமை) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இரண்டாவது தடவையாகவும் ஆளுநராக நியமனம் பெற்று யாழ்ப்பாணத்திற்குச் சென்ற குரேக்கு பலாலியில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

அதன் பின்னர் மாகாண ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்ற அவருக்கு மலர்மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி வரவேற்பளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

வடக்கு மாகாண ஆளுநராக கடந்த 3 வருட காலமாக கடமையாற்றிய ரெஜினோல்ட் குரேயின் பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர், அவர் மத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். எனினும் நியமிக்கப்பட்ட மறுநாளே குறித்த நியமனம் ஜனாதிபதியால் ரத்துச் செய்யப்பட்டு, மீளவும் வடக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg