Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தசாப்தகால அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி: பதவி விலகுகிறார் ராவுல் கஸ்ரோ

In உலகம்
Updated: 06:35 GMT, Apr 17, 2018 | Published: 06:35 GMT, Apr 17, 2018 |
0 Comments
1181
This post was written by : Risha

புதிய தலைவரை தெரிவுசெய்வதற்கு தேசிய சட்டமன்றம் தயாராகி வருகின்ற நிலையில், கியூப ஜனாதிபதி ராவுல் கஸ்ரோ இவ்வாரத்திற்குள் தனது பதவியிலிருந்து விலகுவார் என எதிர்பாரக்கப்படுகிறது.

ராவுல் காஸ்ரோவின் ஓய்வு, கஸ்ரோ சகோதரர்களின் நீண்ட மற்றும் நிலையான அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கியூபாவில் 1959ஆம் ஆண்டு முதல் கம்பூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்காலம் முதல் ஜனாதிபதியாகவிருந்த ராவுல் காஸ்ரோவின் மூத்த சகோதரர் ஃபிடெல் கஸ்ரோ, வயது முதிர்வு காரணமாக 2008ஆம் ஆண்டு அப்பொறுப்பிலிருந்து விலகினார்.

ஃபிடெல் கஸ்ரோவை தொடர்ந்து அவரது இளைய சகோதரர் ராவுல் கஸ்ரோ ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். இவ்வாறு கடந்த ஆறு தசாப்தங்களாக கஸ்ரோh சகோதரர்கள் தலைமையில் கியூபாவின் ஆட்சி நடைபெற்று வந்தது.

ஜனாதிபதி பதவிக்காலம் இவ்வாண்டுடன் நிறைவடைகின்ற நிலையில், மீண்டும் ஜனாதிபதி பதவியில் நீடிக்க போவதில்லை என ராவுல் கஸ்ரோ அறிவித்திருந்ததற்கு அமைய பதவியிலிருந்து இந்த வாரம் விலகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அவர் கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள நிலையில், அப்பதவியில் தொடர்ந்து நீடிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து தெரிவித்த ராவுல் கஸ்ரோ, ”நான் பதவி விலக தீர்மானித்துள்ளேன். நான் 82 வயதை அடைந்துள்ள நிலையில், அத்தீர்மானத்தை எடுப்பதற்கு எனக்கு உரிமை உள்ளது” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg