Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இறக்கும் வரை ஜெயலலிதாவை பார்க்கவில்லை: பன்னீர்செல்வம்

In இந்தியா
Updated: 07:03 GMT, Apr 17, 2018 | Published: 07:03 GMT, Apr 17, 2018 |
0 Comments
1074
This post was written by : Kemasiya

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது முதல் இறக்கும் வரை அவரை தான் பார்க்கவில்லை என, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த துணை முதல்வர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தான் பார்க்கவில்லை என, மீண்டுமொரு முறை உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா இறந்த பின்னர் அவரின் கல்லறைக்கு முன்னாள் பன்னீர்செல்வம் தியானம் மேற்கொண்டிருந்தார் .

குறித்த தியானத்தின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், தான் ஒரு நாள் கூட வைத்தியசாலைக்கு சென்று ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்றும், தனது மனைவி அம்மாவை பார்க்கவில்லையா என அடிக்கடி வினவுவதாகவும் கூறியிருந்தார்.

அதன் பின்னர் மீண்டும் நேற்று,  ஜெயலலிதாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் தான் பார்க்கவில்லை என உறுதிப்பட கூறினார்.

முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ், ஜெயலலிதா மரண விசாரணை ஆணையகத்திடம் கருத்து கூறும்போது, அப்பலோ மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை தேறி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் போது, ஒ.பன்னீர் செல்வமும் உடனிருந்தார் எனக் கூறியிருந்தார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர் வினவியதற்கே துணை முதல்வர் மேற்படி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)