Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிணையில் விடுவிக்கப்பட்டார் மஹிந்தானந்த அளுத்கமகே

In இலங்கை
Updated: 07:01 GMT, Apr 17, 2018 | Published: 07:01 GMT, Apr 17, 2018 |
0 Comments
1054
This post was written by : Varshini

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (செவ்வாய்க்கிழமை) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அமைச்சராக பதவி வகித்த மஹிந்தானந்த, 39 மில்லியன் ரூபாய் அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நேற்று நிதிக்குற்றப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட அவர், கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு பிணை வழங்கப்பட்ட போதும், பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற தவறியதால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பிணை நிபந்தனையாக கடவுச்சீட்டை கையளிக்குமாறு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், தமது கடவுச்சீட்டு ஏற்கனவே உயர்நீதிமன்றில் உள்ளமைக்கான ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)