Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காஷ்மீர் சிறுமி வன்கொடுமை வழக்கில் பெற்றோருக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு

In இந்தியா
Updated: 07:16 GMT, Apr 17, 2018 | Published: 07:16 GMT, Apr 17, 2018 |
0 Comments
1151
This post was written by : Kemasiya

ஜம்மு- காஷ்மீர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபாவின் குடும்பத்தார் மற்றும் அவர்களது சட்டத்தரணிக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிறுமி ஆசிபாவின் கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள், நேற்று (திங்கட்கிழமை) கத்வா நீதிமன்றில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஜம்மு- காஷ்மீர், கத்வா பகுதியில் கடந்த ஜனவரியில் 8 வயது சிறுமி ஆசிபா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியுள்ளது.

இதனுடன் தொடர்புரைடய அனைத்து குற்றவாளிகளுக்கும் அதிக பட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்று, அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன.

இவ்வழக்கில் சிறுமி தரப்பில் ஆஜராகிய சட்டத்தரணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டமையானது, மேலும் இந்த சர்ச்சையை பெரிதாக்கியுள்ளது.

அத்தோடு, இவ்வழக்கு விசாரணையை கத்வா நீதிமன்றிலிருந்து சன்டிகர் நீதிமன்றுக்கு மாற்றுமாறு, குறித்த சிறுமியின் தந்தை தரப்பிலிருந்தும் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, சிறுமியின் குடும்பத்தாருக்கும், சிறுமி தரப்பு சட்டத்தரணிக்கும் உரிய பாதுகாப்பை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவை பிறப்பித்துள்ளது.

இவ்வழக்கு தொடர்பிலான விசாரணை இன்று கத்வா நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மேற்படி உத்தரவை பிறப்பித்த நீதிபதி எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg