Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மணக்கோலத்துடன் போராட்டத்தில் கலந்து கொண்ட புதுமணத் தம்பதிகள்

In இந்தியா
Updated: 07:38 GMT, Apr 17, 2018 | Published: 07:38 GMT, Apr 17, 2018 |
0 Comments
1109
This post was written by : Kemasiya

ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி தூத்துக்குடியில் இடம்பெற்ற போராட்டத்தில், புதுமணத் தம்பதியினர் மணக்கோலத்துடன் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

தூத்துக்குடியில் உள்ள மாதா ஆலயம் ஒன்றில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற போராட்டத்திலேயே, மேற்படி தம்பதிகள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

புதுவாழ்வை ஆரம்பிக்கும் தமது எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காகவே, இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக தம்பதிகள் தெரிவித்தனர்.

அத்துடன் தூத்துக்குடி மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாகவும், உணர்வுள்ளவர்கள் என்ற ரீதியில் இந்த போராட்டத்தில் தம்பதிக்கோலத்தில் கலந்து கொண்டுள்ளதாகவும் மணமகன் தெரிவித்திருந்தார்.

இதன்போது, ‘மீசையை முறுக்கு ஸ்டெர்லைட்டை நொருக்கு’ என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகையையும் ஏந்தியவாறு, தம்பதியினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg