Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.பி.எல்.இற்காக போராடியவர்கள் ஜல்லிக்கட்டின்போது எங்கே போனார்கள்? – ஆனந்த்ராஜ்

In இந்தியா
Updated: 08:23 GMT, Apr 17, 2018 | Published: 08:23 GMT, Apr 17, 2018 |
0 Comments
1060
This post was written by : Kemasiya

காவிரிக்கு எதிரான போராட்டங்கள் இடம்பெறும்போது  ஐ.பி.எல் துடுப்பாட்டம் நடத்தினால்,  போராட்டம் திசைதிருப்பப்படும் எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தவர்கள்,  அதே ஆர்ப்பாட்டத்தை திசைதிருப்பும் வகையில் புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்தும்போது எங்கு போனார்களென,  நடிகர் ஆனந்த்ராஜ் கேள்வியெழுப்பியுள்ளார்.

சென்னையில் நேற்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்படி கேள்வியெழுப்பினார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்யும் தவறுகளுக்கு இயக்குநர் பாரதிராஜா உடந்தையாக செயற்படுகிறார் என குற்றம்சாட்டினார்.

அத்துடன் எதிர்வினை என்று சொல்வதே தவறு. ஒருவர் அடித்தால் நாமும் திருப்பி அடிப்போம் என்பதே அதன் அர்த்தம். எனவே ஒரு பொலிஸார் அடித்தால் நாமும் திருப்பி அடிக்க முடியும் என கருதுவது சட்டத்திற்கு புறம்பானது.

யாராக இருந்தாலும் மொழியை வைத்து அரசியல் செய்யாதீர்கள். கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் இப்போதே மறைமுகமாக ஆரம்பித்து விட்டது.

எனவே 3மாத காலம் கடந்தாலும் காவிரி நீர் கிடைக்கும் என்பதை பா.ஜ.க. வாய்திறந்து தெரிவிக்காது. அவர்கள் தமிழக மக்களை எதிர்ப்பாளர்களாக காட்டி வாக்கு சேகரிக்கும் திட்டத்தோடு காலத்தை காய் நகர்த்துகின்றனர்.

எனவே விளையாட்டை, விளையாட்டாக பார்க்க வேண்டும். அவ்வாறின்றி போராட்டத்தை அது திசை திருப்பும் என நினைத்தால் எல்லா விளையாட்டுகளும் தடை செய்யப்பட வேண்டும். நியாயம் என்பது அனைவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும்” என ஆனந்த்ராஜ் தெரிவித்திருந்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை சென்ற பிரதமர் மோடிக்கு எதிராக இயக்குநர் பாரதிராஜா உட்பட பல்வேறு  கட்சிகளை சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.

இதேவேளை சென்னை சேம்பாக்கத்தில் நடத்தப்பட்ட ஐ.பி.எல் போட்டியானது, போராட்டத்தை திசை திருப்பும் வகையில் அமையுமென்றும் அதனை வேறு இடத்திற்கு மாற்றக்கோரியும் போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் போராட்டம் நடத்தியவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதோடு போராட்டத்தை கட்டுப்படுத்த தடியடி மேற்கொண்ட பொலிஸார் மீது நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பாராதிராஜா ஆகியோர் எதிர்த் தாக்குதல் நடத்தியதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

 குறித்த விடயங்கள் தொடர்பில் நேற்று ஊடகவியலாளர்களிடம் பேசிய நடிகர் ஆனந்த்ராஜ்  மேற்படி தெரிவித்திருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)