Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை கிரிக்கெட்டின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் இராஜினாமா!

In கிாிக்கட்
Updated: 08:07 GMT, Apr 17, 2018 | Published: 08:02 GMT, Apr 17, 2018 |
0 Comments
1311
This post was written by : Varshini

இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக பணியாற்றிவந்த தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நிக் பொதாஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (செவ்வாய்க்கிழமை) இத்தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 13ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காகவே தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பொதாஸ், இப்பதவியிலிருந்து நீங்குவதற்கான சரியான சந்தர்ப்பம் இதுவென குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணிக்காக பணியாற்றிய காலம் தன் இதயத்தில் நீங்கா இடம்பிடித்துள்ளதென்றும், பயிற்றுவிப்பாளராக தன்னை வளர்த்துக்கொள்ள சிறந்த சந்தர்ப்பமாக காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில், தனக்கு வாய்ப்பளித்த இலங்கை கிரிக்கெட் சபைக்கு நன்றி தெரிவிப்பதாக நிக் பொதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg