Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அடுத்த சம்பியன் பட்டத்திற்கு தயாராகும் ரபேல் நடால்!

In டெனிஸ்
Updated: 08:14 GMT, Apr 17, 2018 | Published: 08:14 GMT, Apr 17, 2018 |
0 Comments
1047
This post was written by : Varshini

மொன்டே கார்லோ ஓபன் டென்னிஸ் தொடரில் தனது 11ஆவது சம்பியன் பட்டத்துக்காக ஸ்பெய்ன் வீரர் ரபேல் நடால் தயாராகி வருகிறார்.

இம்மாதம் 11ஆம் திகதி பிரான்ஸில் ஆரம்பமாகிய மொன்டே கார்லோ ஓபன் டென்னிஸ் தொடர், எதிர்வரும் 22ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதில்,  பட்டத்தை வெல்ல முடியும் என்பது ரபேல் நடாலின் நம்பிக்கையாக உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிச் சுற்றுவரை முன்னேறிய நடால், மரின் சிலிச்சுடனான காலிறுதிப் போட்டியில் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார். எனினும் கடந்த வார இறுதியில் நடைபெற்ற டேவிஸ் கிண்ண காலிறுதிப் போட்டியில் வெற்றிபெற்றபோது நடாலின் உடல்நிலை குறித்த சந்தேகங்கள் தீர்ந்தன.

இந்நிலையில் மொன்டே கார்லோ ஓபன் டென்னிஸ் தொடரில் தனது 11ஆவது சம்பியன் பட்டத்துக்கு நடால் குறிவைத்துள்ளார்.

கடந்த வருடம் நடைபெற்ற இத்தொடரிலும் சம்பியன் பட்டம் வென்ற நடால், பத்து தடவைகள் மொன்டே கார்லோ ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை தன்னகத்தே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)