Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வைகோ பரப்புரைப் போராட்டம்

In இந்தியா
Updated: 08:31 GMT, Apr 17, 2018 | Published: 08:31 GMT, Apr 17, 2018 |
0 Comments
1108
This post was written by : Kemasiya

ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வாகன பேரணியில் சென்று பரப்புரையை ஆரம்பித்துள்ளார்.

கோவில்பட்டி முதல் குளத்தூர் வரை இன்று வாகனத்தில் சென்று பரப்புரை செய்யும் வைகோ, நாளை கரிசல்குளம் முதல் புதியம்புத்தூர் குறுக்கு சாலை வரை பரப்புரை செய்யவுள்ளதாக  ம.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 21ஆம் திகதி செய்துங்க நல்லூர் முதல் உடன்குடி வரையும், 22ஆம் திகதி திருவைகுண்டம் முதல் பெரியதாரை வரையும் பிரசார பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 28ஆம் திகதி தூத்துக்குடியில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் குறித்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் தமிழகத்தில் போராட்டம் இடம்பெற்று வருகின்ற நிலையில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று வாகன பரப்புரையை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg