Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்யாவில் டெலிகிராம் சேவை தடை: காகித விமானங்களை ஏவி ஆர்ப்பாட்டம்

In ஐரோப்பா
Updated: 08:41 GMT, Apr 17, 2018 | Published: 08:41 GMT, Apr 17, 2018 |
0 Comments
1050
This post was written by : Risha

ரஷ்யாவில் அதிகம் பயன்பாட்டில் உள்ள பிரபல சமூக வலைத்தளமான டெலிகிராம் மெசெஞ்சர் (Telegram messenger) சேவை தடை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவில் ஆர்ப்பாட்டம் வெடித்துள்ளது.

அதன்படி, மத்திய பாதுகாப்பு சேவை கட்டடத்திற்கு முன்னாள் நேற்று (திங்கட்கிழமை) பெருந்தொகையானோர் அணிதிரண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பயனர்களின் இரகசிய செய்திகளுக்கு பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கான ஆணைக்கு இணங்க சேவை உரிமையாளர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில் இத்தடை விதிக்கப்பட்டதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தடைக்கு எதிராக அணிதிரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் Telegram messenger சேவையின் சின்னத்தை பிரதிபலிக்கும் வகையில் காகித விமானங்களை அமைத்து ரஷ்ய மத்திய பாதுகாப்பு சேவை கட்டடத்தை நோக்கி ஏவி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இவ்வாறாக குறித்த பகுதியில் அமைதியின்மை நீடித்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சேவையை சர்வதேச ரீதியில் 200 மில்லியன் பாவனையாளர் உபயோகிப்பதுடன், உலகின் 9ஆவது பிரபல்ய தொடர்பாடல் சமூக வலைத்தளமாக இது காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)