Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேற்குலக நாடுகளின் ஏவுகணைகள் சிரியாவினால் அழிப்பு: ரஷ்யா

In ஐரோப்பா
Updated: 09:37 GMT, Apr 17, 2018 | Published: 09:37 GMT, Apr 17, 2018 |
0 Comments
1607
This post was written by : Risha

சிரியாவை இலக்குவைத்து மேற்குலக நாடுகளிலிருந்து ஏவப்பட்ட 103 ஏவுகணைகளில் 71 ஏவுகணைகளை சிரிய இராணுவம் அழித்தொழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் IGOR KONASHENKOV நேற்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளினால் கடந்த 14ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலானது, சிரியாவின் ஆராய்ச்சி நிலையங்களை மாத்திரம் இலக்குவைத்து நடத்தப்பட்டது அல்ல.

விமான தளங்கள் உள்ளிட்ட சிரியாவின் இராணுவ சொத்துக்களை அழித்து ஒழிக்கும் நோக்கத்துடனேயே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஆனால், மேற்குல நாடுகளின் ஏவுகணை தாக்குதல்களை, சிரியா நவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை பயன்படுத்தி தகர்த்திருந்தது எனத் தெரிவித்தார்.

சிரியாவின் டூமா நகரில் கடந்த 7ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இரசாயன ஆயுத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவின் தலைமையில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவின் ஆதரவுடன் இந்த வார இறுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)