Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நெய்மரின் தலைமையில் பிரேஸில் அணி உலக்கிண்ணம் வெல்லும்: பீலே நம்பிக்கை

In உதைப்பந்தாட்டம்
Updated: 09:50 GMT, Apr 17, 2018 | Published: 09:50 GMT, Apr 17, 2018 |
0 Comments
1065
This post was written by : Anojkiyan

ரஷ்யாவில் நடைபெறவுள்ள கால்பந்து உலகக்கிண்ணத்தை நெய்மரின் தலைமையில், பிரேஸில் அணி வெல்லும் என முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கழக அணியான பரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணிக்காக விளையாடிவரும் நெய்மர், சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், காயமடைந்ததால் தற்போது சத்திர சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் உள்ளார்.

ஆகையால், அவர் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள கால்பந்து உலகக்கிண்ண தொடரில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நெய்மர் குறித்து பீலே கூறுகையில், “சரியாக என்ன நிகழப்போகிறது என்பது எங்களுக்கு தெளிவாக தெரியவில்லை. ஆனால், உலகக்கோப்பைக்கு முன் நெய்மர் தயாராகிவிடுவார்.

அவரது காயம் மிகப்பெரிய அளவில் மோசமானதல்ல. உலகக்கிண்ண தொடரில் நான் பெற்ற அதிஷ்டம் நெய்மரும் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)