Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு மக்களின் கோரிக்கைக்கு அமையவே மீண்டும் பதவியேற்றேன்! – ரெஜினோல்ட் குரே

In இலங்கை
Updated: 09:41 GMT, Apr 17, 2018 | Published: 09:41 GMT, Apr 17, 2018 |
0 Comments
1118
This post was written by : Varshini

வடக்கு மாகாணத்தின் ஆளுநராக தன்னை மீண்டும் நியமிக்குமாறு வடக்கு மக்களே ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாக ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநராக இரண்டாவது தடவையாகவும் நியமிக்கப்பட்ட ரெஜினோல்ட் குரே, இன்று (செவ்வாய்க்கிழமை) தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த தவணைக்காலம் நிறைவடைந்து சென்றபோது, வடக்கின் பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்படாமல் இருந்ததால் மனவேதனையுடன் சென்றதாக ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார். எனினும், அவற்றை செயற்படுத்துவதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைவதாக மேலும் தெரிவித்தார்.

குறிப்பாக மீண்டுமோர் தடவை பிறந்ததைப் போன்று மகிழ்வதாக குறிப்பிட்ட ஆளுநர், வடக்கின் அபிவிருத்தி உள்ளிட்ட செயற்பாடுகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட கடமைப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)