Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரியா மீதான தாக்குதல் சட்டவிரோதமானவை: நிபுணர் கருத்தை வெளியிட்டது தொழிற்கட்சி

In
Updated: 10:05 GMT, Apr 17, 2018 | Published: 10:05 GMT, Apr 17, 2018 |
0 Comments
1116
This post was written by : Risha

சமீபத்திய சிரியாவிற்கு எதிரான அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் சட்டவிரோதமானவை என விவரிக்கும் வகையிலான நிபுணர்களின் கருத்தை உள்ளடக்கிய அறிக்கையொன்றை பிரித்தானிய எதிர்க்கட்சியான தொழிற்கட்சி வெளியிட்டுள்ளது.

ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பொது சர்வதேச சட்ட பேராசிரியர் ஒருவரின் சட்ட ரீதியான கருத்தை உள்ளடக்கிய ஐந்து பக்க அறிக்கையை தொழிற்கட்சியின் துணைத் தலைவர் வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையானது சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட இரசாயன ஆயுத தாக்குதலுக்கான உடனடி அவசர நிவாரண செயற்பாடல்ல.

அது மாத்திரமன்றி அரசாங்கத்தின் செயற்பாடு, அரசாங்க படைகளின் பயன்பாடு தொடர்பான சர்வதேச சட்ட விதிகளின் கட்டமைப்பை புறக்கணிக்கும் செயற்பாடாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ட்ரம்ப் தலைமையிலான தாக்குதலுக்கு பிரதமர் தெரேசா மே ஆதரவளித்தமை மோதலை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கையாகும் என தொழிற்கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் விமர்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)