Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அக்கரைப்பத்தனையில் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

In இலங்கை
Updated: 10:50 GMT, Apr 17, 2018 | Published: 10:50 GMT, Apr 17, 2018 |
0 Comments
1032
This post was written by : poovannan

அக்கரைப்பத்தனை – ஊட்டுவள்ளி தோட்டத்தில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிவரை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஊட்டுவள்ளி தோட்டத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு ஊடாக கிராம மயப்படுத்தல் வேலைத் திட்டத்தின் கீழ் 71 தனிவீடுகள் அமைக்கப்பட்டன. மிகுதியாக அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்திற்கான வேலையை ஆரம்பிக்கும்படி கோரியே மேற்படி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லயங்களில் வசிப்போர் புதிய வீடுகளுக்கு மாற்றப்பட அழுத்தம் கொடுக்கவும் அமைக்கப்படவேண்டிய 84 வீடுகளை அமைக்குமாறு வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோர் கோஷம் எழுப்பினர்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் டயகம – தலவாக்கலை பிரதான வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை தோட்ட நிர்வாகம் உடனடி தீர்வை எட்டாவிடின் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)