மட்டக்களப்பில மாயமானவர் சடலமாக கண்டெடுப்பு!
This post was written by : poovannan

மட்டக்களப்பு – இருதயபுரம் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியைச் சேர்ந்த தங்கவேல் ஜெயராஜ் (வயது 49) என்பவரே நேற்று (திங்கட்கிழமை) மாலை மட்டக்களப்பு சின்ன உப்போடை வாவிக்கரை பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் வாகன சாரதியாவார் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
குறித்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

