Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நேபாளத்திலுள்ள இந்திய தூதரகத்தில் குண்டு வெடிப்பு

In இந்தியா
Updated: 11:01 GMT, Apr 17, 2018 | Published: 11:01 GMT, Apr 17, 2018 |
0 Comments
1153
This post was written by : Kemasiya

நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்தில், இனந்தெரியாதவர்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

இன்று (செவ்வாய்க்கிழமை) அலுவல நேரத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும் தூதரகத்தின் கட்டட யன்னல்களின் கண்ணாடிகள் மற்றும் கதவுகள் சேதமடைந்துள்ளதாகவும், தொழில் அதிகாரிகளுக்கு எவ்வித சேதமும் இல்லையெனவும் ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தொடர்ந்தும் தூதரக வீதிகள் எங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த வீதியுடாக வானங்கள் உட்பட பொதுமக்கள் பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg