Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீள்குடியேறும் மக்களுக்கான பணிகளை முன்னெடுப்போம்: எஸ்.சுகிர்தன்

In இலங்கை
Updated: 11:41 GMT, Apr 17, 2018 | Published: 11:41 GMT, Apr 17, 2018 |
0 Comments
1028
This post was written by : poovannan

வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளை சீர்செய்யும் பணிகளை வலி. வடக்கு பிரதேச சபை மேற்கொண்டு வருவதாக அப்பிரதேச சபையின் தலைவர் எஸ்.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

மேற்படி பகுதியில் மீள்குடியேறிவரும் மக்களுக்கான வீதிகளை அமைக்கும் பணிகளையும் குடிநீர் வசதிகளையும் அமைப்பது தொடர்பில் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்துக் கூறுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், “மீள்குடியேறும் மக்களுடைய குடிநீர் தேவைக்காக கிணறுகளை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையினை வலிகாமம் வடக்கு பிரதேச சபை செய்து வருகின்றது. அதேபோல் அவசரமாக குடிநீர் தேவைப்படும் இடங்களில் குடிநீரையும் வழங்கிவருகிறோம்.

14 நலன்புரி நிலையங்களில் வாழ்ந்த 315 குடும்பங்களினதும், உறவினர், நண்பர்கள் வீடுகளில் வாழ்ந்த 650 குடும்பங்களினதும் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இந்த காணிகளுக்கு செல்வதற்கான வீதிகளை புனரமைத்து மக்கள் மீள்குடியேறுவதற்கான பணிகளை வலிகாமம் வடக் கு பிரதேச சபை செய்து வருகின்றது.

மேலும் மக்களுடைய பயன்பாட்டில் இல்லாமையினால் கிணறுக ள் அனைத்தும் குப்பைகள் நிரம்பி காணப்படுகின்றது. மேலும் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்த மக்களுடையபொருட்களை கொண்டுவர முடியாத நிலை காணப்பட்டால் அதனையும் வலிகாமம் வடக்கு பிரதேச சபை செய்து கொடுக்கும்” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)