Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்ய உளவாளி விவகாரம்: திரவமாகவே விஷமேற்றப்பட்டுள்ளது

In ஐரோப்பா
Updated: 11:25 GMT, Apr 17, 2018 | Published: 11:25 GMT, Apr 17, 2018 |
0 Comments
1133
This post was written by : Risha

ரஷ்யாவின் முன்னாள் உளவாளியான செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகளான யூலியாவிற்கு திரவ வடிவில் விஷமேற்றப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த இருவரும் இரசாயன தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்ட சோல்ஸ்பரி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் விபரங்களை சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராம அலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படியே இத்தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அம்புலன்ஸ் நிலையம், செர்கெய் ஸ்கிர்பாலின் இல்லம், அவர்கள் மயக்கமடைந்த தினத்தில் உணவு உட்கொண்ட உணவு விடுதி உள்ளிட்ட மேலும் ஒன்பது இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. குறித்த நடவடிக்கைகளை நிறைவுசெய்ய பல மாதங்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவின் முன்னாள் உளவாளியான செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகளான யூலியா பிரித்தானியாவின் சோல்ஸ்பரி பல்பொருள் அங்காடியொன்றில் கடந்த மார்ச் நான்காம் திகதி சந்தேகத்திற்கு உரிய வகையில் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

இச்சம்பவத்தினால் பிரித்தானியாவிற்கும்- ரஷ்யாவிற்கும் இடையிலான உறவில் பாரிய நெருக்கடி ஏற்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையே பனிப்போரையும் தோற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)