Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரான்ஸ் மவுண்ரன் திட்டம் கனடாவின் தேசிய நலன்களுக்கு மிகவும் முக்கியமானது: பிரதமர்

In கனடா
Updated: 11:47 GMT, Apr 17, 2018 | Published: 11:46 GMT, Apr 17, 2018 |
0 Comments
1054
This post was written by : Anojkiyan

ட்ரான்ஸ் மவுண்ரன் எரிபொருள் குழாய் விரிவாக்கத் திட்டமானது, கனடாவின் தேசிய நலன்களுக்கு மிகவும் முக்கியமானது என பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.

ட்ரான்ஸ் மவுண்ரன் எரிபொருள் குழாய் விரிவாகத் திட்டம் தொடர்பில் அல்பேர்ட்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பிய முதல்வர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘பிரிட்டிஷ் கொலம்பிய அரசாங்கம் தொடர்ந்து தனது எதிர்பினை வெளியிடாதிருந்தால் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டிருக்காது.

தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைக்கு அதுவே காரணம்.அத்துடன் இந்த திட்டம் தொடர்வதற்கு, நிதி மற்றும் சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளது’ என கூறினார்.

அல்பேர்ட்டாவுக்கும் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கும் இடையே முன்னெடுக்கப்பட்டு வந்த இந்த எரிபொருள் குழாய் விரிவாக்கத் திட்டம், மக்கள் போராட்டங்கள் மற்றும் மாநில அரசின் நெருக்குதல் ஆகியவற்றால் இடை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்த்ககது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg