Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லண்டனில் தொடரும் வன்முறை: இளைஞன் உயிரிழப்பு

In
Updated: 17:35 GMT, Apr 17, 2018 | Published: 11:37 GMT, Apr 17, 2018 |
0 Comments
1199
This post was written by : Risha

கிழக்கு லண்டனில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிழக்கு லண்டனில் உள்ள ஃபொரஸ்ட் கேட் பகுதியில் வைத்து நேற்று (திங்கட்கிழமை) இரவு குறித்த இளைஞன் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 18 வயதுடைய ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், உயிரிழந்தவரை முறையாக அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளும், மரண பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

லண்டனில் அண்மைக்காலமாக இவ்வாறான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், தலைநகர் லண்டனில் இவ்வாண்டில் மாத்திரம் இதுவரை 40 பேர் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)