Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விடுக்கப்பட்ட காணிகளுக்குள் இராணுவ முகாம்கள்!

In இலங்கை
Updated: 12:23 GMT, Apr 17, 2018 | Published: 12:23 GMT, Apr 17, 2018 |
0 Comments
1123
This post was written by : Anojkiyan

சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு, மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்ட வலி.வடக்கு மயிலிட்டி உட்பட 3 கிராம சேவையாளர் பிரிவில் சிறிய இராணுவ முகாம்கள் தற்போதும் உள்ளதாகவும் அதனை முழுமையாக அகற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

விடுவிக்கப்பட்ட 683 ஏக்கர் காணி பகுதியை இன்று (செவ்வாய்க்கிழமை) பார்வையிடச் சென்ற போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“மயிலிட்டி பிரதேசம் ஒரு போதும் விடுவிக்கப்படமாட்டாது என சொல்லப்பட்ட பிரதேசம். இந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கூட மயிலிட்டி மற்றும் மயிலிட்டி துறைமுகப் பிரதேசம் விடுவிக்கப்படமாட்டாது என உறுதியாக கூறப்பட்டிருந்தது. ஆனால், மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்ட காலத்தில் இந்தப்பகுதி முழுவதும் விடுவிக்கப்பட வேண்டுமென கேட்டிருந்தோம். அதற்கமைய இந்தப் பிரதேசமும், வீதிகளும் மக்கள் பாவணைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.

28 வருடங்கள் மக்கள் வாழாத பிரதேசம் என்ற காரணத்தினால், இந்தப்பகுதிகளில் நிறைய வேலைத்திட்டங்கள் செய்யப்பட வேண்டியிருக்கின்றது. பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருப்பதனால், அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்திற்கான நிதிகளை உடனடியாக கொடுக்க வேண்டும்.

அரசாங்கம் தமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அதே நேரம் அரசியல் கட்சியாகிய தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒரு சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உத்தேசித்துள்ளது. காணி விடுவிப்புத் தொடர்பாக மேல்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் இந்த காணி விடுவிப்பிற்கு ஒரு காரணியாக இருக்கின்றது” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)