Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தடைகளை கடந்து அன்னை பூபதியின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படும்: அரியநேத்திரன்

In இலங்கை
Updated: 12:55 GMT, Apr 17, 2018 | Published: 12:55 GMT, Apr 17, 2018 |
0 Comments
1090
This post was written by : Anojkiyan

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு தினம் அனைத்து தரப்பினரின் பங்குபற்றலுடன் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) அன்னையின் நினைவிடத்தில் நடாத்தப்படும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

அன்னை பூபதியின் நினைவு தினத்தை எங்களின் அனுமதியில்லாமல் யாரும் எவ்விதமான நிகழ்வுகளையும் நடத்தக்கூடாது என அன்னை பூபதியின் குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில், முறைப்பாடு செய்துள்ள நிலையில் இதுகுறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவுதினத்தை அவரின் நினைவிடத்தில் கடந்த ஆண்டு தொடக்கம் நடத்திவருகின்றோம். இதனை எந்த அரசியல் நோக்கத்திற்காகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்தவில்லை. தியாக தீபம் அன்னை பூபதியினை பொதுவாக ஒரு தியாக தாயாகவே நாங்கள் அவரை நினைவுகூருகின்றோம். அவர் பொதுவான ஒரு குடும்பத்தினருக்கோ ஒரு மாவட்டத்திற்கோ, ஒரு பிரதேசத்திற்கோ உள்ள தாய் அல்ல. உலக தமிழர்களின் உன்னத தாயாக போற்றி வணங்கும் இந்த உன்னத நேரத்தில் இந்த நிகழ்வினை செய்கின்றோம்.

அன்னை பூபதி என்னும் பெயருக்கு நிதியொதுக்கீடுகளை செய்வதில் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியொதுக்கீடுகளை செய்வதில் சில சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். அன்னை பூபதியின் ,இ;த இடத்தினை பதிவுசெய்து அதனை சட்டரீதியாக மாற்றப்படும்போது அதற்கான உதவிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்குவார்கள்.

அன்னை பூபதியின் பிள்ளைகளுக்கு தமது தாய் தொடர்பில் பல்வேறு உரிமைகள் உள்ளது. எனினும் அவரது பிள்ளைகள் ஒன்றை உணர்ந்துகொள்ளவேண்டும். அன்னை பூபதியானது உலக தாயாக பரிணமித்து உள்ளார். அவரை நினைவுகூரும் புனித கடமையில் அவர்களும் இணைந்து பங்களிப்பினை வழங்கவேண்டும்.

அவர்கள் முறைப்பாட்டினை விலக்கிக்கொண்டு நினைவு தினம் அஸ்டிப்பவர்களுடன் கலந்துரையாடி பொதுவாக அனைவரும் இணைந்து அன்னை பூபதியின் நினைவு தினத்தினை அனுஸ்டிக்கவேண்டும். அன்னை பூபதியின் நினைவு தினத்தை அனுஸ்டிப்பதை தடுப்பதாக இருந்தால் அது இன்னுமொரு சக்திக்கு தீணிபோடுவதாக சென்றுவிடும். இந்த நிகழ்வினை மட்டக்களப்பில் மாத்திரம் செய்யவில்லை. வடகிழக்கு உட்பட புலம்பெயர் தேசங்களிலும் செய்யப்போகின்றோம். அனைத்து இடங்களிலும முறைப்பாடுகளை போட்டு இதனை தடுக்கமுடியுமா” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)