Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து விலகுவதற்கான காரணம் என்ன? -வெளிப்படுத்தினார் சிவகரன்

In இலங்கை
Updated: 14:31 GMT, Apr 17, 2018 | Published: 14:31 GMT, Apr 17, 2018 |
0 Comments
1088
This post was written by : Anojkiyan

தமிழர் விடுதலைக் கூட்டணியில் கொள்கை மற்றும் ஜனநாயகத் தன்மை இல்லாத காரணத்திலேயே அக்கூட்டணியிலிருந்து விலகியதாக ஜனநாயக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கொள்கையில்லை, சனநாயகத் தன்மை இல்லை, சர்வாதிகரம் காணப்படுகின்றது. எந்த விதமான நிபந்தனையும் இல்லாமல் அரசாங்கத்துடன் சரணாகதி அரசியல் நடாத்துகிறார்கள்.  மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை எனும் அடுக்கடுக்கான பல்வேறு விதமான குற்றச்சாட்டுடன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பை ஏற்படுத்தி தமிழர் விடுதலை கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில் ஐந்து கட்சிகள் இணைந்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் போட்டியிட்டோம்.

உள்ளுராட்சி மன்றங்களில் எவருக்கும் ஆதரவு வழங்குவதில்லை எனும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு மாறாக வவுனியாவில் ஈ.பி.ஆர்.எல்.எப் நடந்து கொண்டது அரசியல் அநாகரிகம். கொள்கையில்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டு வைக்கிறது என குற்றஞ்சாட்டி விட்டு அதே வேலையை எம்மால் செய்ய முடியுமா?

பதவி பெறுவதுதான் முக்கியம் என்றால் எதற்காக இந்த கூட்டில் நாம் தொடர வேண்டும். கொள்கையில்லாத தமிழ் தேசிய நீக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலான கூட்டில் நாம் தொடர விரும்பவில்லை என்பதை மிகத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறோம். வவுனியாவில் பொது எதிரியாகிய தேசிய கட்சிகளுடன் கைகோர்த்தமையை வன்மையாக கண்டிக்கின்றோம்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)