Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விடுவிக்கப்பட்ட காணியை நேரில் பார்வையிட்ட கூட்டமைப்பினர்!

In இலங்கை
Updated: 14:55 GMT, Apr 17, 2018 | Published: 14:55 GMT, Apr 17, 2018 |
0 Comments
1233
This post was written by : Anojkiyan

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரிக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட காணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் அதன் பேச்சளார் சுமந்திரன் ஆகியோர் இன்று, விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு திடீர் விஜயம் செய்துள்ளனர்.

அங்கு சென்ற அவர்கள் காணிகளைப் பார்வையிட்டதுடன், மக்களின் குறைகளையும் கேட்டறிந்து கொண்டனர். காணிகளைப் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“வலிகாமம் வடக்கு  பிரதேசம் ஒருபோதும் விடுவிக்கப்படமாட்டாது என சொல்லப்பட்ட பிரதேசம். ஆனால் இந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ஜனாதிபதியிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியதற்கு அமைவாக குறித்த பிரதேசம் விடுவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதி பிரதேச மக்களை வெகு விரைவில் சந்தித்து அவர்களுக்கான வீடுகளை அமைத்தல், பொருளாதார உதவி போன்ற வேலை திட்டங்களுக்கான கலந்துரையாடலை மோற்கொள்ளவுள்ளோம். அதேவேளை இப்பகுதியை துப்பரவு செய்வதற்கான பணிகளையும் முன்னெடுக்கவுள்ளோம்” என கூறினார்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg