Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கையருகில் உலக அழிவு! – ஆரம்பமாகும் மூன்றாம் உலகப் போர்?

In உலகம்
Updated: 15:32 GMT, Apr 17, 2018 | Published: 14:45 GMT, Apr 17, 2018 |
0 Comments
1823
This post was written by : Puvanes

ஒரு உலக அழிவிற்கான ஒத்திகை தற்போது அரங்கேறிக்கொண்டு வருகின்றது என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய உண்மை. காரணம் சிரியா யுத்தம் காரணமாக தற்போது மூன்றாவது உலகப் போருக்கான அபாய அறிகுறிகளை தென்பட ஆரம்பித்து விட்டது.

ஏற்கனவே வடகொரியா, அமெரிக்காவிற்கு விடுத்த அணு எச்சரிக்கைகள் காரணமாக அடுத்த உலக யுத்தம் ஏற்பட்டு விட்டது, உலகம் அழியப்போகின்றது என்ற செய்திகள் வேகமாக பரவி அதே வேகத்தில் அடங்கிப் போயின.

ஆனாலும் இந்த சிரியா போர் அழிவின் உச்சத்தைக் காட்டும் வகையில் எதிரொலிக்கின்றது. இந்தப் போரில் மறைமுகத்தில் பல்வேறு அதிகார போட்டிகள் உள்ளது, வல்லரசுகளுக்கிடையில் இடம்பெரும் போராக மாற்றமடைந்துள்ளது என்பதே உண்மை.

நீண்ட காலமாக ரஷ்யாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே பனிப்போர் உள்ளது என்பது அறிந்த விடயமே. அந்தப் பனிப்போரை இப்போது பகிரங்கப் போராக மாற்றப் போகின்றது சிரியா.

அண்மைக்காலம் முதலாக சிரியா அரசுக்கு சொந்தமான இரசாயன ஆயுதங்களை அழிக்கும் வகையில் அமெரிக்க படைகள் தாக்குதல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கடந்த வாரம் கிளர்ச்சியாளார்கள் வசமிருக்கும் கிழக்கு கட்டா பகுதி முதல் டூமா நகரம் வரை சிரியாவின் ராணுவ படைகள் தாக்குதல் நடத்தின.

இந்த தாக்குதல்களின் போது ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக பரபரப்புச் செய்திகள்வெளியாகின அத்தோடு குறித்த தாக்குதல்களால் குழந்தைகள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். இந்த இரசாயன தாக்குதல்களை காரணமாக வைத்து சிரியாவை தாக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறித்ததோடு அது தற்போது அரங்கேற்றப்பட்டு வருகின்றது.

இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ராணுவ படைகளும் அமெரிக்காவிற்கு ஆதரவாக தாக்குதல்களில் பங்கேற்றன. அதன் பிரதிபலன் தாக்குதல்கள் நடைபெற்ற சில மணி நேரத்திற்குள் ரஷ்ய அதிபர் புடின் கண்டனம் அறிக்கை வெளியிட்டார். அது கண்டனம் அல்ல எச்சரிக்கை…

சிரியாவில் இருக்கும் ரஷ்ய படை மீது அமெரிக்க படையினர் ஏதேனும் தாக்குதல் நடத்தினால் அதன் விளைவாக மோசமான பின்விளைவுகளை சந்திக்க கூடும் என்ற பயங்கர எச்சரிக்கையை பகிரங்கமாக விடுத்தார் ரஷ்ய அதிபர்.

இது இப்படி இருக்க சிரியாவிற்கு ஆதரவாக ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் களமிறங்கக் கூடாது என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இதனால் ஐ.நாவின் அமெரிக்கத் தாக்குதல்களுக்கு ரஷ்யா கண்டனத் தீர்மானத்தைக் கொண்டு வர அதற்கு பொரும்பாலான நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்க தீர்மானம் தோல்வியடைந்தது. இந்த பின்னணி யுத்தத்தின் விளைவு ரஷ்யாவும் – அமெரிக்காவும் பகிரங்கமாக மோதிக்கொள்ளும் அபாயத்தைத் தோற்றுவித்துள்ளது.

காரணம் ரஷ்யாவின் ஆதரவில் இருக்கும் சிரியா மீது தாக்குதல்களை மேற்கொள்ளும், அல்லது அந்தத் தாக்குதல்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு அளிக்கும் நாடுகளின் பட்டியல் மிக அதிகம்.

அமெரிக்கா, பிரித்தானியா,பிரான்ஸ், கனடா, அவுஸ்ரேலியா,தெதர்லாந்து, துருக்கி, ஜேர்மனி உட்பட மேலும் பல நாடுகள் சிரிய விகவாரத்தில் தலையிடுகின்றன.

அதேபோன்று ரஷ்யா எப்போதுமே கழுகுப்பார்வை அமெரிக்கா மீது பகிரங்க எதிராளியாகவே உள்ளது. காரணம் வல்லரசு அதிகாரம். ரஷ்யாவிற்கு ஆதரவாக சீனாவும் களமிறங்கியுள்ளது.

அதன்படி ரஷ்யாவை அடக்க அமெரிக்க தரப்பு தீர்மானிக்கும் எனின் அதற்கு எதிராக சீனாவும் போர்க்கொடி தூக்கும் அபாயம் உள்ளது. அண்மையில் சீனா தனது இராணுவ பலத்தை பகிரங்கமாக காட்டியது, அமெரிக்காவிற்கு தானும் சளைத்தவர் அல்ல என ஆயுதங்களையும், போர்க்களங்களையும் சீனா வெளிச்சம் போட்டுக்காட்டியது அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே நோக்கப்படுகின்றது.

அதேபோன்று ரஷ்யாவிற்கு ஆதரவு அளிக்கும் நோக்கம் இல்லாவிட்டாலும் கூட அமெரிக்காவின் கொட்டத்தை அடக்க வேண்டும் என வட கொரியாவும் ரஷ்யா பக்கம் சேர்ந்துக் கொள்ளும் வாய்ப்புள்ளது.

இப்படியாக நாடுகளுக்கிடையில் யுத்தம் ஏற்பட்டால் அது சாதாரண யுத்தமாக இருக்காது அணுக்களின் ஆதிக்கத்தால் உலக யுத்தமாக மாறி அது உலக அழிவிற்கே வழிசமைக்கும் என்பது ஏற்றுக் கொள்ள வேண்டும்.

எவ்வாறாயினும் தற்போதைய சர்வதேச அரசியல் களத்தின் நீண்ட நாட்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு அதிகாரத்தை நிலை நிறுத்த முடியாமல் இருந்த நாடுகளுக்கு தற்போது காரணம் கிடைத்து விட்டதால் அது உலகப்போராக உருவெடுக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதே சர்வதேச அரசியல் அவதானிகளின் கருத்து.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg